மீண்டும் இணையும் விக்ரம் வேதா ஜோடி! மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் வெற்றி திரைப்படம்!

மீண்டும் இணையும் விக்ரம் வேதா ஜோடி! மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் வெற்றி திரைப்படம்!

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சார்லி. இந்த படத்தை மார்ட்டின் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்வதி நாயர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தை தமிழில் மாதவன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

தற்போது இதுபற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை திலீபன் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளாராம். இப்படத்தில் நயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளாராம். மாதவனும் ஷ்ரதா ஸ்ரீநாத்தும் விக்ரம் வேதாவில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube