மீட்பு பணி ஊழியர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்….முதலமைச்சர் வேண்டுகோள்…!!

மீட்பு பணிகளில்உள்ள ஊழியர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

விழுந்தமாவடி பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை பார்வையிட்ட முதல்வர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.அப்போது பேசிய முதலமைச்சர் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் பிரச்சனையை போக்க 3000 க்கும் மேற்பட்ட கைப்பம்புகள் போடப்பட்டுள்ளதுஎன்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் அரசு செய்துள்ளது என்றும் கூறினார்.மேலும் 27 பொருட்கள் அடங்கிய 15 நாட்களுக்கு தேவையான 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அரசு வழங்கி வருகிறது என்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் கூறினார்.மேலும் மா, தென்னை , முந்திரி விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும்,சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் விரைவில் கட்டித்தரப்படும் என்றும் கூறினார். பின்னர் பேசிய அவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment