மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்க நிறுவனம் சதி!

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் முன்னனி நிறுவனமான மஹிந்திரா தனது ஜீப் வகையை சேர்ந்த ரோக்ஸர் என்ற ஆஃப்.ரோடு காரை அமெரிக்காவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. அங்கும் இந்த வகை ஜீப்பின் மாடல் நன்றாக உள்ளது. இதனால் அங்குள்ள உள்ளூர் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபியட் கிறைஸ்லர் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரித்துள்ள ஜீப் ராங்லர்  காரின் விற்பனை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையை தடை செய்ய இந்நிறுவனம் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்துள்ளது.
அமெரிக்க நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாகவது, ரோக்ஸர் காரானது கிட்டத்தப்பட்ட தங்களது ஜீப் ராங்லரை போன்றே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது அப்பட்டமான பதிப்புரிமை மீறல் எனவும் ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் குண்டை தூக்கி போட்டது. இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மேலும்  அமெரிக்க வர்த்தக சபையிலும் புகார் அளித்திருந்தது.
இந்த வழக்கில் , மஹிந்திரா நிறுவனத்திற்கே தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை மையமாக வைத்தே இந்த ரோக்ஸர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு,  இருக்கை அமைப்பு, டேஷ் போர்டு ஃபினிஷ் உள்ளிட்ட ஒரு சில அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் தார் டிஐ காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின்தான் ரோக்ஸர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணங்கள் தான் மஹிந்திரா நிிறுவனம் வழக்கில் வெற்றிபெற துணை நின்றன.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment