மக்கள் செல்வன் வெளியிடும் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை என நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்திலிருந்து எந்தன் கண்களை காணோம் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment