போலி பாஸ்போர்ட் வழக்கில் திரைதுறையினருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணையில் அம்பலம்..!

கடந்த மே  மாதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை வந்த தேனியை சேர்ந்த தேவராஜ் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது அது போலி பாஸ்போர்ட் என தெரியவந்தது.இவரை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு பேர் சிக்கினர் அவர்கள் ஐஸ் தீவிரவாதிகள் இருக்கும் நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர் ஆகையால் இந்த வழக்கு போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதற்காக தனிப்படை அமைத்து விசாரித்தபோது சென்னை , கோவை,உள்ளிட்ட பல இடங்களில் 11 பேர் சிக்கியுள்ளனர்.இதில் பாபு என்பவரிடம் விசாரித்தபோது தான் திரைத்துறையினர் பலரும் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்தது . வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளும் போது  பாஸ்போர்ட் இல்லாத நடிகை,நடிகர்களுக்கு,மற்றும் மற்ற அனைவருக்கும் போலி பாஸ்போர்ட் தயார் செய்ய இந்த குழுவை அணுகுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் இந்த சம்பவத்திற்கு தொடர்பான திரைத்துறையினர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment