போராட்டக்காரர்களை தூண்டி விடும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசினார் : ஓ.பன்னீர்செல்வம் ..!

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு.

எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்:- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திலே ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக முதல்-அமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் எது நியாயமாக நிறைவேற்ற வேண்டுமோ, எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதனையெல்லாம் நிறைவேற்றி, அவர்கள் போராட்டத்தை நிறுத்தக் கூடிய அளவிற்கு அவர்களிடம் பேசிட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள மொத்த அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர்கள் 7.42 லட்சம் பேர். மொத்தமாக உள்ள இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு, அரசின் வரிவருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவிகிதமாகும். மாநில அரசின் வரிவருவாயில் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடப்படும் தொகை 6 சதவிகிதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். இந்த அளவுக்கு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கியுள்ளதை கருத்தில்கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமையாற்றுவார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் அந்த அமைப்பைச் சந்தித்து அவர்களிடம் அவர் சொன்ன விளக்கத்தையும் சொல்லி, கூடுதலாக ஒன்றையும் சொன்னார். இன்றைக்கு இருக்கின்ற அரசு செய்யாது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதைச் செய்வோம் என்று சொல்லி, அங்கு அவர்களை தூண்டிவிடுகின்ற வகையில், அவர் பேசிவிட்டு வந்திருக்கிறார் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின்:- நான் தூண்டிவிட்டு வந்ததாக சொல்கிறார்கள். அந்த பொருள்பட அவர் நினைப்பார் என்று சொன்னால், நாங்களும் அவர்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் தூண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. எனவே, நீங்கள் அதை எப்படி தூத்துக்குடியில் நடைபெற்ற அந்த போராட்டத்திலே அவர்களை எல்லாம் நீங்கள் அழைத்துப் பேசாமல் ஏற்பட்ட நிலை போலதான் இப்போதும் நீங்கள் அழைத்துப் பேசு முற்படக்கூடிய நிலையிலே இல்லை. எனவே, நீங்கள் அழைத்துப் பேசாத காரணத்தால் இதை கண்டித்து நாங்கள் தி.மு.க. சார்பில் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கக்கூடிய வகையிலே வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment