புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சன்னி லியோனுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சியை தடை செய்தது அரசு…!

 

ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையான சன்னிலியோன் தற்போது அதுமாதிரியான படங்களில் நடிப்பதை கைவிட்டு விட்டு இப்போது இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இதனால் இந்தியாவில் அவருகேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர் ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இன்னொரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

புத்தாண்டு தினத்தையொட்டி வருகிற 31-ந் தேதி இரவு பெங்களூருவில் சன்னிலியோனின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சன்னிலியோன் கவர்ச்சி நடனம் ஆடுவார் என்று தகவல் பரவியதால், நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர்கள் ஆர்வத்தோடு டிக்கெட் வாங்கினார்கள்.இதனால் அங்கு பல லட்சம் டிக்கெட்களை விற்றார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

இந்த நிலையில், நடிகை சன்னிலியோன் பெங்களூருவில் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்‌ஷன யுவ சேனை உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சன்னி லியோனின் வருகையால் கர்நாடக கலாசாரம் கெடுவதை ஏற்க எங்களால் முடியாது என்று அந்த அமைப்புகள் கூறின.

இதைத்தொடர்ந்து, சன்னி லியோனின் நடனத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்து உள்ளது. இதுபற்றி அந்த மாநில உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறுகையில், மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கன்னட கலாசாரம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் அப்போது அவர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment