பீகாரில் நிரூபிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் நிரூபிக்கப்படும்!ஹெச்.ராஜா நம்பிக்கை

பீகாரில் நிரூபிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் நிரூபிக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா:

பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே எடியூரப்பாவுக்கு இருந்தது.எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு கர்நாடகாவில் அமைய வாய்ப்புள்ளது .எடியூரப்பா பதவி விலகியதால் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைக்க வாய்ப்புள்ளது .ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழஙகுகிறார் எடியூரப்பா.எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை பெற்ற பிறகு, குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா கூறியதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment