பிரச்சாரம் நிறைவு பெரும் அன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் : தலைமை தேர்தல் அதிகாரி

  • ஏப்ரல் 16-ந் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க தேவையில்லை. அதற்கு மேல் எடுத்துச்செல்லும் போது அந்த பணத்துக்கான ஆவணங்களான ஏடிஎம் சீட்டு, வங்கி காசோலை விவரம், வங்கியில் பணம் எடுத்ததற்கான விவரங்களை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து ஏப்ரல் 16-ந் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம். மதுரையில் மட்டும் அன்று இரவு 8 மணி வரை பிரசாரம் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment