பாராளுமன்ற தேர்தல்….. களமிறங்கிய பிஜேபி….17 மாநிலங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்…!!

அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள.குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.அதிலும் அதிக பாராளுமன்ற தொகுதியை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான நிர்வாகிகளை பாரதீய ஜனதா கட்சி நியமனம் செய்துள்ளது.
சுமார் 80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்க இருக்கின்றது. இவர்களுடன்  காங்கிரஸ் கட்சியும் இணையலாம் என்று எதிர்  பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவிற்கு எதிராக பெரும் கூட்டணி அமைய உள்ள நிலையில் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக மூன்று பேரை பா.ஜனதா நிர்வாகிகளாக நியமனம் செய்துள்ளது.
அதனடிப்படையில் குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கோவர்தன் ஜாதாபியா,பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் தயானந்த் கவுதம், மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் மிஸ்ரா ஆகிய மூன்று பேரும் உ.பி. மாநில பாராளுமன்ற தேர்தல் நிர்வாகிகளாக நியமிக்கப்பபட்டுள்ளனர்.
மாநிலங்கள் அடிப்படையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் :
ராஜஸ்தான் மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் : ரவிசங்கர் பிரசாந்த்
உத்தரகாண்ட் மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் :  தாவர்சந்த் கெலாட்டு
பீகார் மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் : புபேந்தர் யாதவ்
சத்தீஷ்கார் மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் : அனில் ஜெயின்
ஆந்திர மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் :மாநிலங்களவை எம்.பி.  முரளிதரன் மற்றும் தியோதர் ராவ்
அசாம் மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் : மகேந்திர சிங்
குஜராத் மாநில பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் : ஒபி மாத்தூர்
இதே போல இமாச்சல பிரதேசம் , ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, பஞ்சாப், தெலுங்கானா, சிக்கிம் 17 மாநிலங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளகளை பாரதீய ஜனதா கட்சி நியமனம் செய்துள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment