பாஜகவை டாப் டு பாட்டம் வரை ஓட விட்ட எதிர்கட்சிகள்!அபார வெற்றிபெற்ற எதிர் கட்சிகள்!

பாஜகவை டாப் டு பாட்டம் வரை ஓட விட்ட எதிர்கட்சிகள்!அபார வெற்றிபெற்ற எதிர் கட்சிகள்!

இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியானது.

மக்கள்வை தொகுதிகள்:

1) கைரானா: உ.பி.யில் உள்ள கைரானா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங்கை, 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் அபார வெற்றி பெற்றுள்ளார்.

2)பால்கர்: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மக்களவை தொகுதியில் பாஜக 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதனால் பாஜக எளிதில் வென்றது.

3) பண்டாரா -கோண்டியா:  மகாராஷ்டிராவில் பண்டாரா – கோண்டியா மக்களவை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு மற்ற கட்சிகள் தேசியவாத காங்கிரஸூக்கு ஆதரவளித்தன. இதனால் ஏற்கெனவே வென்ற இந்த தொகுதியில் பாஜக வீழ்ந்தது.

4) நாகாலாந்து மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்த தொகுதியில் முன்னதாக வென்ற நாகா மக்கள் முன்னணி பின் தங்கியுள்ளது

சட்டப்பேரவை தொகுதிகள்:

1) நூர்பூர்: உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

2) ஜோகிஹாட்: பீகார் மாநிலம் ஜோகிஹாட் சட்டப்பேரவைத் தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஷாபாவாஷ் ஆலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் முர்ஷித் ஆலத்தைக் காட்டிலும் 41 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

3) ராஜேஸ்வரி நகர்: கர்நாடக மாநிலம் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துளசி முனிராஜு கவுடாவைக் காட்டிலும் 41162 ஆயிரம் வாக்குகள் கூடுதலா பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

4) அம்பட்டி: மேகாலயா அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.

5) செங்கனூர்: கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார்.

6) மகேஷ்தாலா: மேற்குவங்க மாநிலம், மகேஷ்தாலா தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

7) தாரலி: உத்தராகண்ட் மாநிலம் தாரலி தொகுதியில் ஆளும் பாஜக 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

8) ஷாகோட்:  பஞ்சாப் மாநிலம் ஷாகோட் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி அகாலிதளம் கட்சியின் கோட்டையாக இருந்தபோதிலும், அங்கு காங்கிரஸ்  20,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

9) கோமியா:  ஜார்க்கண்ட் மாநிலம் கோமியா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பபிதா தேவி வென்றுள்ளார்.

10) சில்லி: ஜார்கண்ட் மாநிலம் சில்லி  சட்டப்பேரவைத் தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் சீமா தேவி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் ஏற்கெனவே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வசமே உள்ளது.

இதைத் தவிர மகாராஷ்டிரா மாநிலம் பாலுஸ் கடேகான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏற்கெனவே போட்டியின்றி வென்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *