பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

இன்று முதல்  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியில் முதல்போக பாசனப் பரப்பு நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்  தண்ணீரைத் திறந்து வைத்தார். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 49 அடியாக உள்ளது.

Leave a Comment