பாசனத்திற்காக சண்முகாநதி நீர் திறப்பு…முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…!!

பாசனத்திற்காக சண்முகாநதி நீர் திறப்பு…முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…!!

பாசனத்திற்காக சண்முகாநதி நீர் தேக்கத்திலிருந்து வரும் 14ஆம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் சண்முகாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறந்துவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ஆயிரத்து 640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன்பெறும் என சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர்,சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 14ஆம் தேதி முதல் 50 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாவுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை கிராமங்கள் பாசன வசதி பெறும் எனவும்,நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என விவசாயிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *