"பல்டி அடித்த கவர்னர்" துணைவேந்தர் நியமனம் என்னிடம் ஆதாரம் இல்லை..!!

கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் சொல்வதை வைத்துதான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளது என்று சொன்னேன் என்று ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளார்.
கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். அக்டோபர் 5ஆம் தேதி  சென்னை  திநகரில்  உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை  துணைவேந்தர் நியமனத்தில்  கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில்  தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும்  நான்  தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரே  ஊழல் நடைபெற்றது என்று கூறியது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வந்த செய்திக்குறிப்பில் நான் கல்வித்துறை துணை வேந்தர் நியமனத்தில் பணம் கோடிக்கணக்கில் புரண்டுள்ளது என்று சொன்னது கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் சொல்வதை வைத்துதான் சொன்னேன் , நான் ஆளுநராகிய பிறகு நியமித்த 9 துணைவேந்தர்களையும் தகுதியின் அடிப்படையில் நியமித்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் இருந்தது.அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மீது ஊழல் ஒழிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவே இதன் அடிப்படையில் தான் நான் கூறினேன் என்றார்.ஊழல் தொடர்பாக நான் பேசியதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment