பட்ஜெட்டால் தொடர் சரிவை சந்திக்கும் இந்தியப் பங்குச் சந்தைகள்!

பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது. பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் இந்த சரிவு காரணமாக் வெளிநாட்டு முதலீடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.

மேலும் ஆசிய பங்குச் சந்தை சரிவுகளும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 35 ஆயிரத்து 66 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 348 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. வர்த்தகம் தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தபட்சமாக 34 ஆயிரத்து 520 புள்ளிகளைத் தொட்டது.

சென்செக்ஸ் 35 ஆயிரம் புள்ளிகளைக் கடந்ததற்காக ஒருமுறையும் 36 ஆயிரம் புள்ளிகளைக் கடந்ததற்காக ஒருமுறையும் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்ட நிலையில் சென்செக்ஸ் மீண்டும் 35 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.

இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 10 ஆயிரத்து 760 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தின் போது 170க்கும் அதிக புள்ளிகள் குறைந்து குறைந்தபட்சமாக 10 ஆயிரத்து 586 புள்ளிகளைத் தொட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment