படேல் சிலையில் என்னென்ன சிறப்பு அம்சங்கள்..!!

உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
உயரம்: 182 மீட்டர் (நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு உயரமானது)
இடம்:  நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சுமார் 3.5 கி.மீ. சுற்றளவு.
மதிப்பு: ரூ.2,989 கோடி (தோராயமாக)
சிற்பி: 93 வயதான பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல சிற்பி வி.சுதர்
கட்டுமான காலம்: 2 வருடங்கள், 10 மாதங்கள் (2015, டிசம்பர் 19-ல் தொடங்கப்பட்டது)
பயன்படுத்தப்பட்ட பொருட்கள்: சிமெண்ட் 70 ஆயிரம் டன்கள், வலுவூட்டப்பட்ட எஃகு 18,500 டன்கள், 6000 டன்கள் கட்டமைப்பு எஃகு மற்றும் 1,700 மெட்ரிக் டன்கள் வெண்கலம்
சிறப்பம்சங்கள்: உயரமான சிலைகள் பின்பற்றும் விதிகளில் இருந்து மாறுபட்ட வடிவமைப்பு. அடித்தளத்தில் குறுகி, மேலே செல்லச் செல்ல விரிவடையும் போக்கு.
மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றின் வேகத்தை எதிர்த்து நிற்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள், படேலை நேரில் சந்தித்தவர்களுடன் கலந்துரையாடி, சுமார் 2 ஆயிரம் புகைப்படங்களின் கலவையில் இருந்து ஒரு புகைப்படம் இறுதி செய்யப்பட்டது.
சிலை ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகம் – கணுக்காலுக்கு மேலே வரை. (நினைவுப் பூங்காவும் மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது)
இரண்டாம் பாகம் – தொடை வரை
மூன்றாம் பாகம் – 153 மீட்டர் உயரத்தில் பொதுமக்கள் சுற்றுலாத் தலம்
நான்காம் பாகம் – பராமரிப்புப் பகுதி
ஐந்தாம் பாகம் – தலை மற்றும் தோள்கள் வரை.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment