நேபாளம் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு மற்றும் 23 பேர் மாயம்.!

நேபாளத்தின் மியாக்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் மராங்கில் இருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டன, மீதமுள்ள 1 தடகானியிலிருந்து மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் காணாமல் போன 23 பேர் மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காத்மாண்டு போஸ்ட் நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

மேலும் மாவட்ட காவல்துறை தலைவர் டி.எஸ்.பி கிரண் குன்வார் கூறுகையில், தொடர்ந்து மீட்பு பணி ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்களுடன் அந்த இடத்தை நோக்கி பறக்கத் தயாராகி வருவதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் காரணமாக 43 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும். மொத்த சேதம் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்டோர் தக்கம், மராங் மற்றும் காந்திவாங்கில் உள்ள சமூக கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.