நீரை சுத்தம் செய்யும் வடிகட்டி!

சென்னை போன்ற பல்வேறு பெருநகரங்களில் நீர் மாசு என்பது சாதாரணமான வி‌ஷயம்.இங்கு நிலத்தடியிலிருந்து பெறப்படும் நீரில் பல்வேறு ரசாயனங்கள் கலந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, நீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் கடினத்தன்மை ஏற்படுத்தும் இதர உப்புக்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது ஒரு பக்கம் இருக்க, குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து தண்ணீர் அப்படியே மேல் நிலை தொட்டிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
இங்கே சேமிக்கப்படும் தண்ணீர் பயன்படுத்தும் நிலைகளுக்கேற்ப ஓரிரு நாட்கள் சேமிக்கப்படுகிறது. குறிப்பாக, குளியலறையில் ‘‌ஷவர்’ மூலம் கடின நீர் அல்லது குளோரின் கலக்கப்பட்ட தண்ணீர் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க நவீன வடிகட்டி சந்தையில் கிடைக்கிறது.
அப்போது அதில் பொருத்தப்பட்டுள்ள மேலை நாட்டு தொழில் நுட்பமான ‘நானோ–சில்வர் கார்பன் இணைந்த 4 அடுக்கு பில்டர் மற்றும் தொழில்நுட்பம் போன்ற நவீன யுக்திகளுடன் தயாரிக்கப்பட்ட வடிகட்டிகள் குளியலறையில் சுத்தமான தண்ணீர் பயன்பாட்டுக்கு உதவுகின்றன.
மேலும் நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளையும் அந்த பில்டர் தவிர்க்க உதவுவதாகவும் அறியப்பட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment