நிர்மலா தேவியை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

நிர்மலா தேவியை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.இந்த நிலையில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் 7 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை இன்று சாத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.Related image

சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *