நாம் செய்யும் லைக் ,ஷேரில் உள்ள பின்னணி-இயக்குனர் காலிஸ்

” 4 வயது குழந்தை மற்றும் 70வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்க வேண்டும் என கூறினார்.மேலும் கூறுகையில் ,நாம் செய்யும் லைக் ,ஷேர் இவற்றில் நடக்கும் பின்னணியை என்ன என்பதை இப்படம் எடுத்து கூறுகிறது என்றார்

சினிமாவில் பொறுத்தவரை இப்போது சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது போன்ற படங்களை தான் மக்களும் விரும்பி பார்க்கின்றனர்.

இதனை புரிந்து கொண்ட இயக்குனர்கள் பலர் சமூக பிரச்சனைகளை மையமாக கொண்ட திரைப்படங்களை உருவாகி வருகின்றனர்.தற்போது இயக்குனர் காலிஸ் இயக்கி வரும் திரைப்படம்”கீ”.இப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகராக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்து உள்ளார்.மேலும் இப்படத்தில் அனிகா சோடி , ஆர்.ஜே. பாலாஜி , ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார்.”கீ” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் காலிஸ் இப்படத்தின் கதைக்களத்தை பற்றி கூறுகையில்,செல்போன் வைத்து இருப்பவர்கள் அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்.

குறிப்பாக” 4 வயது குழந்தை மற்றும் 70வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவர்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்க வேண்டும் என கூறினார்.

மேலும் கூறுகையில் ,நாம் செய்யும் லைக் ,ஷேர் இவற்றில் நடக்கும் பின்னணியை என்ன என்பதை இப்படம் எடுத்து கூறுகிறது என்றார்.

author avatar
murugan

Leave a Comment