தோற்றாலும் கெத்தை விடாத விராட் கோலி ..!!

தொடர்ந்து முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் இந்தியாவின் கேப்டன் கோலி 

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்..

இந்தியா இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது.இந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்த தொடரை  இந்தியா இங்கிலாந்திடம் பறிகொடுத்துள்ளது.

இத்தொடரில் 8 இன்னிங்ஸ் விளையாடிய கோலி 544 ரன்கள் குவித்து முதலிடம் உள்ளார்.டெஸ்ட் போட்டி தரவரிசையில் கோலி 937 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றார்.அதே போல இந்திய அணியின் புஜாரா அவர்   சிறப்பான ஆட்டத்தால் 6 இடத்தில் நீடிக்கின்றார்.

அதே போல பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் இந்திய வீரர்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.இந்த தொடர்களில் 6 விக்கெட் வீழ்த்திய சமி 670 புள்ளிகள் பெற்று 25வது இடத்தில் இருந்து 19 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இதே போல் பும்ரா 7 இடங்கள் முன்னேறி 37வைத்து இடம் முன்னேறியுள்ளார்.

இதனால் இந்தியாவின் ரசிகர்கள் தோல்வி அடைத்த வேதனையையும் சாதனையாக்கி பார்க்கிறார்கள்..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment