தொண்டருக்கு மத்தியில் கருணாநிதி..!அதே உடன்பிறப்பு மத்தியில் கம்பீர தோற்றம்..!விழா கோலம் பூண்ட அறிவாலயம்..!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க சென்னை வந்த நிலையில்  அவர்களை தொடர்ந்து உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா முதலமைச்சர் பங்கேற்றனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்த நிலையில் அவர்களை திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சியினரும் வரவேற்றனர்.இதனிடையே தொண்டர்களுக்கு மத்தியில் கம்பீரமாக நின்றிருந்த கலைஞர் சிலை சோனியா காந்தி  திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் ,நடிகர்கள்,தொண்டர்கள் என அண்ணா அறிவாலயமே விழா கோலம் பூண்டு காணப்படுகிறது.

author avatar
kavitha

Leave a Comment