தொடர்ந்து 16 முறை 200 ரன்னுக்கு மேல் இந்தியா..,ஆஸி..தென்.ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளியது

  • கடைசி டி20 கிரிக்கெட் போட்டி 202 இலக்கு நிர்ணயித்த இந்தியா
  • டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை 200 ரன்களை 16 முறை இந்தியா கடந்து சாதனை.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20  போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும்-சமன் செய்யும் நோக்கில் இலங்கையும் இன்று களமிரங்கியது.இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனால் இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது 20 ஒவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201  ரன்கள் எடுத்தது.இதன் மூலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணிகளில் இந்தியா  16 முறை 200 ரன்களை  கடந்து சாதனை படைத்துள்ளது.அதே போல் ஆஸ்திரேலியா இதுவரை 12 முறையும் தென்னாப்பிரிக்கா 11 முறை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha