தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா அதிகாரி வருத்தம்..!!

தமிழ்நாட்டையே அதிர வைத்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு அமைதி வழியில் போராடிய மக்களை கலவரம் என்ற போர்வையில் அடக்கியது காவல்துறை இதில் 13 உயிர் அநியாமாக காவல்துறையால் சூட்டு கொல்லப்பட்டனர் மேலும் 144 தடை உத்தரவு என காஷ்மீர் போல காட்சியளித்தது காவல்துறையின் அதிகாரத்தால் தூத்துக்குடி

இந்த நிலையில் துப்பாக்கி சூடு குறித்து  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் பேசியது

சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையைப் பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வுகள் கிடைக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். திட்டங்களை அமல்படுத்தும் முன் மக்களிடம் பேச வேண்டும்.” என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment