தும்பிக்கையில்லாமல் நம்பிக்கையோடு வாழும்” குட்டி யானை”..! கலங்கடித்த குட்டி.!!

எல்லோருக்கும் பிடித்தமானதும்,பிஞ்சுகளால் விருப்பக்கூடிய விலங்கு யானை.அதுவும் குட்டி யானைகளை கண்டால் அதிக பிரியம் ஏற்படும் அது செய்யும் குறும்புகளை ரசித்து கொண்டே இருக்கலாம்.

Related image

யானை ஊருக்குள் வந்தால் ஊருரெல்லாம் யானையின் பின்னே செல்லும் ஊர் எல்லை வரை சென்ற வந்த யானையை வழியனுப்பி விட்டு வருவார்கள்.அன்று குழந்தைகளுக்கு  கொண்டாட்டம் தான்.யானை தும்பிக்கையில் ஆசிர்வாதம் வாங்கினால் அந்த கணேசனிடம் ஆசிர்வாதம் வாங்கியதாக எண்ணுவோம்.

Related image

பொதுவாக யானையின் தும்பிக்கை சுவாசிக்க, உணவு உண்ண, நீர் அருந்த, மோப்ப சக்தி போன்ற அனைத்துக்கும் தும்பிக்கையை தான் பயன்படுகிறது  யானை தன் தும்பிக்கையை இழந்தால் அதனால் உயிர்வாழ்வது கடினம்.

அப்படி பார்த்த நம் கண்ணுக்கு  ஒரு குட்டி யானை தும்பிக்கையின்றி உயிர்வாழ்வதை அறிவீர்களா..? இதை குட்டியை கண்டவுடன் மனததை பதய வைக்கிறது இதன் தோற்றம் அதன் குறையை கண்டு கொள்ளாமல் துணிச்சலுடன் துள்ளிதிரியும் இந்த இளம் குட்டியானை.தென் ஆப்ரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்காவில் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானையைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குட்டி யானை தன் தும்பிக்கையை இழந்து தவித்து வருகிறது.

Related image

குட்டி யானை எப்படி தன் தும்பிக்கையை இழந்தது எனச் சரியாக தெரியவில்லை எனப் பூங்காவின் பணியாளர்கள் அலச்சியமாக தெரிவித்துள்ளனர். எனினும் பூங்காவில் உள்ள குட்டைகளில் தண்ணீர் அருந்தும் போது அங்குள்ள முதலை குட்டி யானையின் தும்பிக்கையைக் கடித்திருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Image result for baby-elephant-without-trunk-at-kruger-national-park-south-africa.html

தற்போது அந்த குட்டி யானை சுவாசிக்க முடியாமலும், உணவருந்த முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. யானையைப் பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள் குட்டி யானையால் இன்னும் சிறிது காலத்துக்கே உயிர்வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளனர். தும்பிக்கையில்லாமல் அந்த குட்டி யானை பூங்காவில் உலாவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது இது அனைவர் மனதையும் கலங்கடிக்கிறது.குட்டியின் இப்படி ஒரு நிலைமையை கண்டு கலங்குகிறது கண்கள்.

Image result for baby-elephant-without-trunk-at-kruger-national-park-south-africa

DINASUVADU

குட்டியின் வீடியோ இதோ..!!

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment