தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை படைவீரர்களுக்கு உண்டு : உமர் அப்துல்லா

ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை நடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு கடந்த மே 16ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.  ஆனால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையும் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
எனினும் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இரு தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன.  இந்த சம்பவங்களில் 2 போலீசார் கொல்லப்பட்டனர்.  மற்றும் 6 பாதுகாப்பு படை அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போர்நிறுத்த தோல்வியை உறுதி செய்ய சிறப்புடன் செயல்பட்ட தீவிரவாத அமைப்புகள், போர்நிறுத்தம் முடிந்தபின் முன்பை விட பாதுகாப்பு படையினரின் தாக்குதல் கடுமையானால் அதற்கு தீவிரவாதிகள் தங்களையே திட்டி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து, புல்வாமாவில் போலீசாரை கொன்றவர்கள் அணையாத நரகத்தின் நெருப்புக்கு செல்ல தகுதியானவர்கள்.  பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment