திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…!

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னைக்கு இதுவரை 45 சதவீதம் குறைந்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது.வடதமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது மீனவர்களுக்கு எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ. மழைப்பதிவானது என்றும்  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.

இந்நிலையில் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று  அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

 

Leave a Comment