தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்:6 பேரை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்!

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களில் 6 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த 23 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் தங்கள் பயிற்சியாளருடன் சாகச பயணம் மேற்கொண்டனர்.பின்னர் அங்கு கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது.

பின்னர் விவரம் அறிந்த மீட்புப் படையினர் குகைக்கு சென்று சிறுவர்களை மீட்க்கும் பணியில் இறங்கினர்.கடந்த 2 ஆம் தேதி சிறுவர்களை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர்.

தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக குகைக்குள் சிக்கித்தவித்து வருகின்றனர்.இந்நிலையில் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது. சிறுவர்களை மீட்க 18 பேர் கொண்ட மீட்புப்படை குழுவினர் கயிறுக்கட்டி குகையினுள் சென்றனர்.தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் .

மேலும் மற்ற சிறுவர்களையும்,பயிற்சியாளர்களையும்  மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தாய்லாந்தில் கடற்படை வீரர்கள்,வெளிநாட்டு நீச்சல் வீரர்கள் மீட்பு பணியிலும் முதலுதவியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment