தமிழக அரசு கன்னியாகுமரி படகு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவு!

தமிழக அரசு  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட செல்லும் படகு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையையும் கண்டுகளிக்க அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்து சார்பில் சுற்றுலா படகு இயக்கப்படுகிறது. இந்நிலையில் படகு போக்குவரத்திற்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சாதரண கட்டணம் 34 ரூபாயிலிருந்து 50 ரூபாயகவும், சிறப்புக்கட்டணம் 169 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி மாணவ மாணவிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த சலுகை கட்டணமும் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment