தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமல்…!

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, விசைப்படகு  மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்ற உத்தரவை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக நாகை, நம்பியார் நகர் போன்ற பகுதியிகளில் 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 61 நாட்கள் மீன் பிடிக்காமல் இருக்கும் மீனவர்கள், அந்த நாட்களில் படகுகளை சீர் செய்தல், வலைகளை சரி பார்த்தால் போன்ற புனரமைப்பு பணிகளில் ஈடுபடுவர். இந்த  காலகட்டத்தில், மீனவர்களுக்கு உதவியாக மீன்பிடி  தடைகால நிவாரண நிதியாக, ரூ.5,000 அரசாங்கம் வழங்குகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.