தமிழகத்தில் சமூக நலத்திட்ட தணிக்கை குழு இயக்குநர் செயல்பட தடை..!!விதித்தது உயர்நீதிமன்றம்..!!

தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களை எல்லாம் தணிக்கை செய்யக்கூடிய குழுவின் இயக்குனர் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
GFX IN சமூக நலத்திட்டங்களுக்கான நிதி மற்றும் கிராம பஞ்சாயத்துகளை முறையாக சென்றடைவதை கண்காணிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வரும் சமூக தணிக்கை குழுவில் இயக்குநர்களை தற்போது நியமித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கென தனி அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் இயக்குநராக அண்ணாமலை பிரேம் குமார் என்பவரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.அதில் மாநில அரசே இயக்குநரை நியமிப்பதால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்போது சமூக தணிக்கை குழுவின் இயக்குனராக உள்ள அண்ணாமலை பிரேம்குமார் என்பவர் செயல்பட இடைக்கால தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும தணிக்கை துறையும்,தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

author avatar
kavitha

Leave a Comment