டீசல் விலை ஏற்றம் பெட்ரோல் விலையில் இல்லை மாற்றம்..!!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலை 80 – ஐ நெருங்குகிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்ந்து உச்சத்திலேயே செல்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும், டீசல் விலை 9 காசுகள் உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment