ஜிம்பாப்பே அணியை 117 ரன்னில் சுருட்டியது தென்ஆப்ரிக்கா..!!

தென்ஆப்ரிக்கா ஜிம்பாப்பே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கிம்பெர்லி டி பீர்ஸ் ட்ய்மென்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ்ஸில் வென்ற தென்ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டுமுனி  பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தென்ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்பே அணியின் விக்கெட் அடுத்தடுத்து என விழுந்தது.ஜிம்பாப்பே அணி  34.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.அதிகபட்சமாக அந்த அணியின் எல்டன் சிகும்புரா 37 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். தென்ஆப்ரிக்கா அணியின் தரப்பில் லுங்கிசானி  ங்கிடி  19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணி 5 ஓவர்களில் 23 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது. அந்த அணியின் ஐடென்  மார்க்ரம் 15 ரன்களிலும் , ரொஸா ஹென்ரிக்ஸ் 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment