சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி….!!!

சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி….!!!

  • நடிகர் விஜய் சேதுபதிதமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • சேதுபதி இரண்டாவது பாகத்தினை தயாரிக்கும் முயற்சியில் அருண்விஜய் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதிதமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான 96 படம் மிகப் பெரிய சாதனைகளை படைத்து பல கோடிகளை வசூல் செய்தது.

இந்நிலையில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சேதுபதி. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து, இதன் இரண்டாவது பாகத்தினை தயாரிக்கும் முயற்சியில் அருண்விஜய் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தின் இரண்டாம்பாகம் குறித்து அருண்விஜய் சொன்ன கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து விட்டதாகவும், முழுமையான ஸ்கிரிப்ட் ரெடியானதும் இதில் நடிக்கிறேன் என அவர் சொல்லியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும்,  விஜய் சேதுபதியை தவிர்த்து முதல் பாகத்தில் இருந்த யாரும் இதில் நடிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. இந்த படம் மூலம் முதல்முறையாக அவர் பார்ட் 2வில் நடிக்க இருக்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *