சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா?! தளபதியின் சர்கார் வேட்டை 6 நாள் வசூல்!!

சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா?! தளபதியின் சர்கார் வேட்டை 6 நாள் வசூல்!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆளுங்கட்சியை விமர்சிக்கும் காட்சிகள் உள்ளன என கூறி அதிமுக போராட்டம் செய்து சில காட்சிகளை நீக்கினர். இருந்தும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த வரவேற்பு பட வசூலிலும் பிரதிபலிக்கிறது. இப்படம் ரிலீஸான நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இப்படம் தலை நகரில் சென்னையில் 6 வது நாளான நேற்று (ஞாயிறு) மட்டும், சுமார் 1.76 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 6 நாளில் 10.77 கோடி ரூபாய் வசூல் செய்து பாகுபலி 2 சாதனையை முறியடித்து முதல் இடத்திலுள்ளது.

Source : tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *