சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நடந்த திருட்டு!

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நடந்த திருட்டு!

பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளரின் வாக்கி டாக்கி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில்  திருடு போன விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

சென்னை மெரினா கடற்கரை அருகே செயல்படும் டி.ஜி.பி அலுவலகத்தில், கடந்த 11 தேதி தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த C- கம்பெனி போலிசார் பாதுகாப்பில் ஈடுபடத் துவங்கினர். அப்போது ஏற்கனவே பாதுகாப்பில் இருந்த ஈ- கம்பெனி காவலர்கள், தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்புக்கான உபகரணங்களை சமர்ப்பித்து விட்டு சென்ற நிலையில், அதில் ஒரு வாக்கி டாக்கி மட்டும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு சிறப்பு படை காவல் ஆய்வாளர் மயில்வாகனன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கடைசியாக பயன்படுத்திய காவலரை கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறையிடம் உள்ள வாக்கி டாக்கிகள் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்றவகையில் மேம்படுத்தபடவில்லை, இதனால் வாக்கி டாக்கியின் சிக்னலை கண்டுபிடிக்க முடியாது. இதேபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் காணாமல் போன 7 வாக்கி டாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும், அதைக் கொண்டு காவல்துறையினரின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டு தவறு நடைபெற வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *