சூப்பர் சிங்கர் செல்ல குட்டி தனுஸ்ரீ இங்கேயும் வந்துவிட்டாரா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தன் வசம் ரசிகர்களாக்கிவிட்டது. இதில் சில முத்தாய்ப்பான தருணங்களை இப்போது பார்த்தாலும் கூடுதல் சந்தோசம் தான்.

இதில் கடந்த வருடம் ஸ்பெஷல் பெர்ஃபார்மராக கலந்துகொண்டு பலரையும் ஈர்த்தவர் தனுஸ்ரீ. பாடகி சித்ரா, மனோ, சுபா, எஸ்.பி.பி, மா.கா.பா, பிரியங்கா மற்றும் பல பெற்றோர்களையும் கவர்ந்தவர் இவர்.

முன்பே கார்த்திக், அதிதி காற்று வெளியிடை படத்தின் புரமோஷனுக்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது கார்த்திக் தனுஸ்ரீயை டையலாக் பேசவைத்தத அட்ராசிட்டிஸ் நினைவிற்கு வரும் தானே…

தற்போது கார்த்திக், சயீஷா, பிரியா பவானி நடித்து வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

இதில் தனுஸ்ரீ, அவரின் தம்பு தேஜ் மனோவும் கலந்துகொண்டார்கள்.. ஒரு வேளை படத்தில் இருவரும் நடிக்கிறார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம்…

author avatar
Dinasuvadu desk

Leave a Comment