சிப் இல்லை என்றால் உங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் செல்லாது..!!இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!!

டெபிட், கிரெடிட் கார்டுகளில் சிப் பொருத்தப்படவில்லை என்றால்வரும் டிசம்பர் 31 தேதிக்குப் பின் செல்லாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வேண்டுகோள் கலந்த எச்சரிக்கையோடு நினைவூட்டியுள்ளது.

இது குறித்து நினைவு கூர்ந்துள்ள ரிசர்வ் வங்கி  கடந்த 2008-க்கு முன்னர் இந்திய வங்கிகள் வழங்கிய யூரோ பே, மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்று இருக்கும் சிப் பொருத்தப்படவில்லை. ஆனாலும்  அதன் பின்னர் சில வங்கிகளாலும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட  கார்டுகளிலும் மேக்னடிக் ஸ்டிரைப் மட்டுமே உள்ளது. இதை எளிதில் ஸ்கிம்மர் கருவிகள் மூலம் மாற்றிவிட முடியும் ஆகவே தான் வங்கிகள் சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை பயணாளகளுக்கு விநியோகிக்க  கடந்த 2015-ம் ஆண்டு முதலே வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

Image result for credit debit card chip

அவ்வாறு அறிவுறுத்திய ரிசவ் வங்கி வங்கிகளுக்கு அவகாசமாக வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கியிருந்தது. வாடிக்கையாளர்கள் சிம் போன்ற சிப் பொருத்தப்படாத பழைய தங்களிம் மேக்னடிக் ஸ்டிரைப் கார்டுகளை மாற்றி , சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்குமாறு வங்கிகளிடம் வாடிக்கையாளர்கள் கோரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வரும் ஜனவரி 1 முதல் சிப் இல்லாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment