சின்ன மச்சானை தொடர்ந்து சார்லி சாப்ளின் படக்குழு வெளியிடும் அடுத்த பாடல்!

நடன புயல் பிரபு தேவா – இளைய திலகம் பிரபு நடித்து நல்ல வரவேற்பை பெட்ரா திரைப்படம் சார்லி சாப்ளின். இத்திரைப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார். இப்படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபு தேவாவும், நிக்கி கல்ராணியும் நடித்து வருகின்றனர். இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷும், ராஜலட்சுமியும் சின்ன மச்சான் என்கிற பாடலை பாடினார். இப்பாடல் வெளியாகி யு டியூபில் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பது. இதனை தொடர்ந்து வில் யு மேரி மீ மச்சான் என்கிற பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

source : tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment