சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் : மோடி ..!

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டுப் பிரதமர் லீ சியன் லூங்குடன் ((Lee hsien Loong)) இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூரின் அதிபர் மாளிகையான இஸ்தானாவில் (Istana) பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் உடன் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாக்கோபை (Halimah Yacob) சந்தித்துப் பேசினார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை பிரதமர் சந்தித்தார். இரு தலைவர்களிடையே இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment