சிகரெட்ட புடிப்பேன் இங்கயே..!!அடம்பிடித்தவரை ஆப் பன்ன விஸ்டாரா..!!

தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்திற்கு உள்ளே சிகரெட்டை புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த ஒரு  பயணி இறக்கி விடப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்படுவதற்காக தயார் நிலையில் இருந்த விஸ்டாரா   யு.கே.707 என்ற பயணிகள் விமானம் அப்போது அந்த விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் சிகரெட் புகைக்க முயன்றார்.
ஆனால் உள்நாட்டு விமானங்களில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்பதால் சிகரெட் புகைக்க பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஆனாலும் அடம்பிடித்த பயணி சிகரெட் புகைத்தே தீர வேண்டும் என்று விமான ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யவே இதை அடுத்து அந்த விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். இந்த பிரச்சனைக் காரணமாக விமானம் 3 மணி நேரம் தாமதமாக  புறப்பட்டுச் சென்றது.

author avatar
kavitha

Leave a Comment