சவுதி அரேபியாவில் அதிசயம்! முதன்முறையாக பெண்களுக்கு லைசென்ஸ்.பெண்கள் மகிழ்ச்சி..!

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத அடிப்படைவாத கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றும் சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.Image result for சவுதி அரேபியா

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிப்பது என படிப்படியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் முதன்முறையாக திங்கட் கிழமை வழங்கப்பட்டது.

ஏற்கெனவே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள 10 பெண்களுக்கு சில பரிசோதனைகளுக்குப் பின் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது. மேலும் சில பெண்களுக்கு முறையான பயிற்சிக்குப் பின் ஓட்டுநர் உரிமம் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment