சபரிமலை: வாவர் மசூதிக்கு வர தடை இல்லை..! ஜமாத் அதிரடி அறிவிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்ற பெண் பக்தர்கள் வாவர் மசூதிக்கு வர தடை இல்லை என ஜமாத் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவை அடுத்து அங்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் எரிமேலியில் பிரசித்திப் பெற்ற நயினார் மஸ்ஜித் உள்ளது.இதை வாவர் மசூதி என்று அழைப்பார்கள்.வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ஒரு ரகசிய  தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தகவல் உண்மை அறிந்து வாவர் பள்ளிவாசலுக்கு செல்லவதற்காக முயன்ற தமிழகத்தை சேர்ந்த சுசீலாதேவி, ரேவதி, காந்திமதி, திருப்பதி, முருகசாமி உள்ளிட்ட  3 பெண்கள் உட்பட 5 பேரை  கேரள போலீசார் கைது செய்தனர். கைது செய்த அவர்கள் மீது மதக்கலவரம் மற்றும் கலகத்தை உருவாக்க முயற்சித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்புவதற்கு அங்கு கடுமையான முயற்சிகளை ஒரு புறம் மேற்கொண்டுவரும் கேரள அரசானது  வாவர் பள்ளி வாசலுக்குள்ளேயும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்தனர். இந்நிலையில் வாவர் மசூதியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையானது வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்ற ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை மாறாக வாவர் மசூதிக்கு வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள அவர்கள் இங்கே வருகின்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்திய பின்னரே சபரிமலை செல்கிறார்கள்.மேலும் பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பொதுவாக பெண்கள் செல்வது கிடையாது. ஆனால் நல்ல எண்ணத்துடன் இங்கு வருகின்றவர்களுக்கு யாருக்கும் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment