சத்தீஸ்கரில் பாஜகவை விரட்டி அடித்த காங்கிரஸ்..!! மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகெல் தேர்வு..!!

சத்தீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
5 மாநில தேர்தலில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் காங்கிரஸ் கட்சி தனது கணிசமான வெற்றியை அங்கு தடம் பதித்த நிலையில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச முதல்வராக மாநில காங்கிரஸ் கட்சியினர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பதவியேற்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்வு செய்யப்பட்ட அவர் டிச.17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு சத்தீஸ்கர் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார்.இந்த தேர்தல் முலம் காங்கிரஸ் தனது கையை ஒங்க வைத்து தாமரையை உதிரவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment