சச்சின் ,சேவாக் இருந்துமே வெறும் 1கே பார்வையாளர்கள் தான் வாராங்க! டி20 கிரிக்கெட்டால் எல்லாமே போச்சு!கம்பீர் வேதனை

சச்சின் ,சேவாக் இருந்துமே வெறும் 1கே பார்வையாளர்கள் தான் வாராங்க! டி20 கிரிக்கெட்டால் எல்லாமே போச்சு!கம்பீர் வேதனை

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், டெஸ்ட் கிரிக்கெட்டை பிசிசிஐ சரியாக மார்க்கெட் செய்வதில்லை இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது என்று  வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு டியூக் பந்துகளில் அதற்கு முன்பாக மட்டைப் பிட்ச்களில் வெள்ளைப் பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“ரெட் ட்யூக் பந்துகளில் ஆடுவது வேறு, வெள்ளைப் பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடுவது வேறு. அங்கு ஆடும் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஆடுவது டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பின் அறிகுறியாகாது.

பிசிசிஐ குறைந்த ஓவர் போட்டிகளில் கவனத்தைக் குறைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

Image result for சச்சின் சேவாக்

பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள், டி20 போன்று மார்க்கெட் செய்வதில்லை. ஈடன் கார்டன்சில் ஒரு டெஸ்ட் போட்டி எனக்கு நினைவிருக்கிறது. மே.இ.தீவுகளுக்கு எதிராக. முதல் நாளில் இந்தியா பேட் செய்கிறது. மைதானத்தில் 1000 பார்க்வையாளர்களே இருந்தனர்.

இத்தனைக்கும் சேவாக், சச்சின், லஷ்மண் விளையாடுகின்றனர், முதல் நாள், ஆனால் 1000 பேர்களே இருந்தனர்” என்றார் கம்பீர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *