கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட…, நுரையீரலை வலிமையாக்க…, இதை மட்டும் செய்தால் போதும்…!

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட…, நுரையீரலை வலிமையாக்க…, இதை மட்டும் செய்தால் போதும்…!

பிராணாயாமாக்கள் மூலம் நுரையீரலை வலிமையாக வைத்திருக்கும் முடியும்.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அதிகமான மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் குறைவு காரணமாக உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதோடு உயிரும் பறிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால் நமது நுரையீரலை  வலிமையாக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்வது முக்கியமானதாகும்.

கொரோனா வைரசின் புதிய திரிபு காரணமாக 60 முதல் 65 சதவீத நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமப்படுகிறார்கள். ஆக்சிஜன் அளவு வேகமாக குறைவதால் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் அவர்களது ஆக்சிஜன் அளவு 80க்கும் கீழ் செல்கிறது. இதனால் உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் நிலைமை மிகவும் மோசமாகி விடுகிறது. இதற்கு நாம் அன்றாடம் சுவாசப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், நமது ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்வதோடு மட்டும் அல்லாது நுரையீரலையும் வலிமையாக்கலாம்.

இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில் பிராணாயாமாக்கள் மூலம் நுரையீரலை வலிமையாக வைத்திருக்கும் முடியும். மேலும், கொரோனா, ஆஸ்துமா மற்றும் பல ஆபத்தான நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

பஸ்திரிகா பிராணயாமா

இந்த பிராணயாமா மூன்று வழிகளில் செய்யப்படுகிறது. முதலில் 5 வினாடிகளில் சுவாசிக்க வேண்டும். இரண்டாவது முறை இரண்டரை வினாடிகளில் சுவாசிக்க வேண்டும். மூன்றாவது முறை வேகமாக சுவாசிக்க வேண்டும் இந்த பிராணயாமம் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய நோய், காசநோய், பிபி, கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

அனுலோம் விலோம்

முதலில் நாம் வசதியாக உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்ள வேண்டும். இப்படி உட்காரும்போது உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். இடது முழங்காலில் உள்ள மடிவில் உங்களது இடது கையை வைத்திருக்க வேண்டும். பின் வலது கையில் மிக சிறிய  விரலை இடது நாசியிலும், உங்கள் கட்டை விரலை வலது நாசியிலும் வைக்க வேண்டும். பின் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக மடிக்க வேண்டும். இடது நாசி வழியாக ஒரு மூச்சை எடுத்து சிறிய விரலால் மூடவேண்டும். வலது நாசியிலிருந்து கட்டை விரலை அகற்றி சுவாசிக்க வேண்டும். இப்போது வலது நாசி வழியாக சுவாசத்தை இழுத்து, கட்டைவிரலால் மூட வேண்டும். இடது நாசியிலிருந்து மூச்சை இழுக்க வேண்டும்.

இப்படி குறைந்தது இவ்வாறு ஐந்து முறையாவது செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் தோல் தொடர்பான பிரச்சினைகளும், நுரையீரலை சுத்திகரிக்கவும் இது உதவுகிறது. இது உடலில் சரியான ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பிரமாரி பிராணயாமா

இந்த பிராணயாமா செய்ய, முதலில் சுகசனா அல்லது பத்மசன வடிவில் அமர்ந்து கொள்ளுங்கள். இப்போது ஆழ்ந்த மூச்சு விடுங்கள். கண்களை மூடி, ஒவ்வொரு கையின் 3 விரல்களை முன்னால் வைக்கவும். கட்டைவிரலைப் பயன்படுத்தி காதுகளை மூட வேண்டும். உடன் ‘ஓம்’ என்று கோஷமிடுங்கள். இந்த பிராணயாமா 3-21 முறை செய்யப்பட வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், மன அழுத்தத்தை குறைப்பதோடு மனம் அமைதியாக இருக்கும்.

கபல்பதி பிராணயாமா

கபாலபதி செய்ய, முதலில் சுகசனாவில் உட்கார்ந்து கண்களை மூட வேண்டும். இப்போது இரு நாசியிலிருந்து உள்நோக்கி ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது சுவாசத்தை விடுங்கள். காற்றை வேகமாக வெளியேற்றி மெதுவாக உள்ளே செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வழியில் குறைந்தது 20 முறையாவது செய்யுங்கள். உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, இரத்த சோகை, பிபி, இதய அடைப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் 2 வினாடிகளில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

உஜ்ஜய் பிராணயாமா

ஆழ்ந்த மூச்சை எடுத்து, உங்களால் முடிந்தவரை அதைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். இதற்குப் பிறகு, வலது நாசியை மூடி, இடது நாசியிலிருந்து சுவாசத்தை  வெளியேற்ற வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாகவும், ஆக்ஸிஜன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். இதனுடன், மனம் அமைதியாக இருக்கும்.

நாடி சுத்த பிராணயாமா

இந்த பிராணயாமாவும் அனூலம் -விலம் போன்றது, ஆனால் இந்த ஆசனத்தில் சிறிது நேரம் சுவாசத்தை வைத்திருக்க முடியும். பின்னர் வலது நாசியிலிருந்து காற்றை வெளியேற்றி இடது நாசியால் உள்ளிழுக்கவும். இது உடலுக்குள் அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைக்க  வழிவகுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube