கேரளாவில் பாய்-சேட்டா..!! மதத்தை மீஞ்சிய மனிதநேயம்..!!கோவிலுக்குள் பக்ரீத் தொழுகை..!!!

கேரள மாநிலத்தில்  பெய்த பேய் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழை, அனைத்து மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையில் மதத்தை மறந்து நாம் எல்லோரும் மனிதன் என்ற உணர்வுடன் நடந்துள்ளது இந்த தொழுகை காட்சி.
Image result for KERALA TEMPLE BAKRID
ஆம் பக்ரீத் பண்டிகைக்கு தொழுகை நடத்துவதற்கு இடமில்லாமல் தவித்த முஸ்லிம்களுக்கு இந்துக் கோயில் வளாகத்தில் இடம் அளித்து தொழுகை நடந்தது.நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்த நேற்று இடமில்லாமல் தவித்தனர், நிவாரண முகாம்களில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழல் இருந்தது.
இதை அறிந்த எரவத்தூர் நகரில் உள்ள இந்து கோயில் நிர்வாகிகள், அனைத்து முஸ்லிம் சமூகத்தினரையும் அழைத்து அங்குள்ள புரப்புள்ளிக்காவு ரத்னேஸ்வரி கோயில் வளாகத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தக் கோரினார்.தாங்கள் கேட்காமலேயே கோயில் இடத்தில் தொழுகைக்கு இடமளித்த இந்துக்களின் செயலை முஸ்லிம்கள் வெகுவாகப் பாராட்டினர்.
வேதமும்- திருக்குர்ஆன் வாசகங்களும் ஒரே இடத்தில் சங்கமமாகின. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நடத்தி மகிழ்ச்சியுடன் சென்றனர்.Image result for KERALA TEMPLE CLEAN
இதேபோல மலப்புரம் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால், வீடுகளை இழந்து தவித்த இந்துக் குடும்பங்களுக்கு மசூதியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு,  இருந்த இந்து கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
மதம் மண்ணில் நசுங்கி மனிதநேயம் துளிராக மண்ணின் மேல்..!!  
DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment