குஜராத்தில் பாஜக தோற்கும் : பாஜக எம்.பி கருத்து

குஜராத்தில் பாஜக தோற்கும் : பாஜக எம்.பி கருத்து

குஜராத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாஜக மந்திரி ஒருவர் குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள  பாஜக எம்.பி சஞ்சய் காகடே கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘குஜராத்தில் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பது பாஜகவை பாதிக்கும். மேலும், முஸ்லிம் மக்கள் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க விரும்பவில்லை.

குஜராத் முதல்-மந்திரியாக மோடி இருக்கும் போது மாநிலத்தின் பிரச்சனைகளை குறித்து கவனம் செலுத்தினார். ஆனால் தற்போது அவர் பிரதமர் ஆகிவிட்டதால் குஜராத் மாநில வளர்ச்சிக்கு அவரால் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை இதவும் பாஜகவுக்கு பின்னடைவை தரும்.

காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜக தேர்தல் பிரசாரத்தை சரியாக நடத்தவில்லை என்று பொருள். பாஜக குஜராத்தில் மட்டுமல்லாமல், ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பா.ஜ.க.வுக்கு ஒரு பெரிய வெற்றியைக் கணித்துள்ளது.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *