காவேரி மருத்துவமனையில் ரஜினியை தனியாக சந்தித்த மு.க.அழகிரி …..!காரணம் என்ன ?

நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

பின்னர் இன்று இரவு நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.அதில் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்தேன் என்று கூறினார்.

பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.

ஆனால் காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அழகிரியை மட்டும் மருத்துவமனையில் தனியாக சந்தித்தார்.இதுவரை கருணாநிதி உடல்நிலை குறித்து சந்தித்த அனைவரின் புகைப்படமும் ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்தபடியே புகைப்படம் வெளியானது.ஆனால் நடிகர் ரஜினிகாந்தை மட்டும் அழகிரி தனியாக சந்தித்துள்ளார்.இது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment