காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, பாமக சார்பில் போராட்டம்!

பாமக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அழைப்பு விடுக்கப்பட்ட பொதுவேலை நிறுத்தம் காரணமாக வட தமிழகத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதோடு ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே பாமக தலைவர் ஜிகே.மணி தலைமையில் பாமகவினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே.மணி, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில் தமிழர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என ஜிகே.மணி எச்சரித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment